“சர்ச்சைக்குரிய ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல”: நழுவும் ராஜஸ்தான் பாஜக தலைவர்!!

முன்னதாக எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ஜெயின் என்ற தொழிலதிபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கூறியது போல பாஜக அவருடன் எந்த தொடர்பையும் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“சர்ச்சைக்குரிய ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல”: நழுவும் ராஜஸ்தான் பாஜக தலைவர்!!

பாஜகவின் மூத்த தலைவரான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

Jaipur:

ராஜஸ்தானில் மாநிலத்தில் நடைபெற்று வரும் சமீபகால அரசியல் குழப்பங்கள் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆளும் காங்கிரசின் மாநில முதல்வராக உள்ள அசோக் கெஹ்லோட் அரசாங்கத்தினை கலைக்க துணை முதல்வர் சச்சின் பைலட்டுடன் இணைத்து சதி செய்ததாக பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் சேகாவத்க்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் சச்சின் பைலட் சில அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுடன் சேர்ந்து அசோக் கெஹ்லோட் அரசாங்கத்தினை வீழ்த்த சதி செய்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து இரண்டு எப்.ஐ.ஆர்களை காவல்துறை பதிவு செய்துள்ளது. இரண்டு வழக்குகளில் ஒன்றில் சேகாவத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

இந்நிலையில் "முதலில் அவர்கள் ஆடியோ கிளிப்பின் மூலத்தைக் கண்டுபிடிக்க விசாரிக்க வேண்டும். அவர்கள் ஆடியோ கிளிப்பின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க வேண்டும். அரசாங்கம் ஆடியோவைப் பதிவுசெய்ததா இல்லையா என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும்" என ஷெகாவத் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பாஜக, காங்கிரஸ் தங்களது தலைவர்களை இழிவுபடுத்த முயற்சிப்பதாகவும், அதன் உள் நெருக்கடிக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பைலட்டும் பாஜகவும் தற்போதை அரசாங்கத்தினை வீழ்த்த மத்திய பிரதேச பாணியில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் குற்றம் சாட்டியிருக்கிறார்.

முன்னதாக எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ஜெயின் என்ற தொழிலதிபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கூறியது போல பாஜக அவருடன் எந்த தொடர்பையும் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.