திருமணத்திற்காக எடுத்த வீடியோவில் லஞ்சம் வாங்கும் காவல் துறை அதிகாரி - நடவடிக்கை எடுத்த மூத்த அதிகாரிகள்

திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பில் சீருடை அணிந்து லஞ்சம் வாங்கும் காட்சி மூத்த அதிகாரிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திருமணத்திற்காக எடுத்த வீடியோவில் லஞ்சம் வாங்கும் காவல் துறை அதிகாரி - நடவடிக்கை எடுத்த மூத்த அதிகாரிகள்

இந்த வீடியோ காட்சி காவல்துறையின் பெருமையை சீர் குலைப்பதாக உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Jaipur: 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி  திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பில் சீருடை அணிந்து லஞ்சம் வாங்கும் காட்சி மூத்த அதிகாரிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணத்திற்கு முன்பு எடுத்த வீடியோ யூ ட்யூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது மனைவி ஹெல்மெட் அணிந்து வராததற்கு  அபராதம் விதிக்கிறார். ஆனால் அந்தபெண் லஞ்சமாக பணத்தை காவல்துறை அதிகாரியின் சட்டைப்பையில் வைக்கிறார். அந்தப் பெண் காவல்துறை அதிகாரியின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்துச் செல்கிறார். பின்னர் மீண்டும் சந்திக்கிறார்கள், காதலிக்கிறார்கள். பாலிவுட் பாடல்கள் பிண்ணனியி ஒலிக்க இந்த வீடியோவை பார்க்கலாம். 

இந்த வீடியோ காட்சிகள் தன்பத்தில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு காவல்துறையின் சீருடை தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

டாக்டர் ஹவா சிங் கோமரியா, ஐஜி அனுப்பிய நோட்டீஸில்  “ காவல்துறையின் சீருடையை தவறாக பயன்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்”  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ காட்சி காவல்துறையின் பெருமையை சீர் குலைப்பதாக உள்ளது என்று  காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................