This Article is From Sep 11, 2018

ஃபேஸ்புக்கில் “மழை நீர் சேகரிப்பு சேலஞ்ச்”- சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் புதிய முயற்சி

மழை நீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும் முயற்சியாக பேஸ்புக் மூலம் புதிய சேலஞ்சுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஃபேஸ்புக்கில் “மழை நீர் சேகரிப்பு சேலஞ்ச்”- சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் புதிய முயற்சி

வீடுகள், கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பை அமைப்பை பொறியாளர்கள் பார்வையிட உள்ளனர்

சென்னை : தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு புதிய சேமிப்பு முயற்சியில் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மழை நீர்சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சென்னை மெட்ரோ வாட்டர் சார்பாக அதன் பேஸ்புக் பக்கத்தில் “மழைநீர் சேகரிப்பு சேலஞ்ச்” பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

சமூக வலை தளங்களில் பிரபலமாகி வரும் ஃபிட்னெஸ் சேலஞ்சுகளால் மக்கள் மத்தியில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே டெக்னிக்கை சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் கையாளுகிறது. இந்த சேலஞ்சில் ஈடுபடும் சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை புகைப்படம் எடுத்து சென்னை மெட்ரோ வாட்டர் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்ய வேண்டும். சிறந்த முறையில் மழைநீர் சேகரிப்பை அமைத்தவர்களுக்கு பரிசுகள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து குடியிருப்பு பகுதியில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் போஸ்டர்களை ஒட்டுதல், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்டவைகளும் நடத்தப்படவுள்ளன. பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை மெட்ரோ வாட்டர் பொறியாளர்கள் பார்வையிட உள்ளனர். அவர்கள் மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இத்தகைய முயற்சியால் வடகிழக்கு பருவமழையின்போது கணிசமான அளவில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.