This Article is From Nov 12, 2019

Rain for TN - கோவை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மழை அறிவிப்பு!

Rain alert for TN - கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடியில் அதிகபட்சமாக, 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Rain for TN - கோவை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மழை அறிவிப்பு!

Rain alert for TN - சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain alert for TN - தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக நல்ல மழை (Rain) பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய வானிலை மையம் (IMD).

இது குறித்து இந்திய வானிலை மையம், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக குறிப்பாக கோயம்புத்தூர் (coimbatore), நீலகிரி, சேலம் (Salem), ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஏனைய உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடியில் அதிகபட்சமாக, 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 


 

.