This Article is From Apr 28, 2020

'வங்கிக் கடன் மோசடி செய்தவர்களில் பாஜகவின் நண்பர்களே அதிகம்!!' - ராகுல் கடும் தாக்கு

சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக ரிசர்வ் வங்கியிடம் ஒரு தகவலை பெற்றுள்ளார். அதாவது, வங்கிக் கடன் மோசடியில் அதிகம் ஈடுபட்ட 50 பேரின் பட்டியலையும் அவர்களது விவரத்தையும் கோகலே கேட்டுள்ளார்.

'வங்கிக் கடன் மோசடி செய்தவர்களில் பாஜகவின் நண்பர்களே அதிகம்!!' - ராகுல் கடும் தாக்கு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியே ரிசர்வ் வங்கிடம் தகவல் பெறப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • வங்கிக் கடன் மோசடி தொடர்பான பட்டியலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
  • பட்டியலில் பெரும்பான்மையினர் பாஜகவின் நண்பர்கள் என ராகுல் விமர்சனம்
  • தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ரிசர்வ் வங்கியில் தகவல் பெறப்பட்டது
New Delhi:

வங்கிக் கடன் மோசடி செய்தவர்களின் பாஜகவின் நண்பர்களே அதிகம் என்றும், இதனால்தான் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக ரிசர்வ் வங்கியிடம் ஒரு தகவலை பெற்றுள்ளார். அதாவது, வங்கிக் கடன் மோசடியில் அதிகம்  ஈடுபட்ட 50 பேரின் பட்டியலையும் அவர்களது விவரத்தையும் கோகலே கேட்டுள்ளார்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கிக் கோகலே கேட்ட விவரங்களை அளித்துள்ளது. இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோரது பெயர்களும், அவர்களது நிறுவனங்களும் கடன் விவரமும் இடம்பெற்றுள்ளன.
 

இதனைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கூறியதாவது-

நான் நாடாளுமன்றத்தில் மிக எளிதான கேள்வியைத் தான் கேட்டேன். வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளிளியிடுமாறு கூறினேன். இதற்கு நிதியமைச்சர் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதனால்தான் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். 
 

.

கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2019 செப்டம்பர் வரையில் ரூ. 6.66 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் மோசடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்ம்சாட்டியுள்ளது. 

.