This Article is From Jul 20, 2019

புளூவேல்லைத் தொடர்ந்து உயிரை பறிக்கும் ப்ளாக் பாந்தர் கேம் : புனேவில் இளைஞர் தற்கொலை

”தற்கொலை செய்து கொள்வதற்கு முன் குறிப்பை ஒன்றை எழுதியதாகவும் அதில் பிளாக் பாந்தர் கூண்டிலிருந்து வந்து விட்டது.அதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இது தான் முடிவு” என்று தற்கொலை குறிப்பு எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்.

புளூவேல்லைத் தொடர்ந்து உயிரை பறிக்கும் ப்ளாக் பாந்தர் கேம் : புனேவில் இளைஞர் தற்கொலை

குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்த போது மாலி புளூவேல் போன்ற ஏதோவொரு ஆன்லைன் கேம் விளையாடியதாக தெரிவித்தனர். (Representational)

Pune:

புனேவில் 20 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்டான். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் புளூவேல் போன்ற ஏதோ ஆன்லைன் கேமில் தன்னுடைய டாஸ்க்கை முடிப்பதாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இறந்த இளைஞன் திவாகர் மாலி லோனிகந்த் பகுதியைச் சேர்ந்தவர்.

”தற்கொலை செய்து கொள்வதற்கு முன் குறிப்பை ஒன்றை எழுதியதாகவும் அதில் பிளாக் பாந்தர் கூண்டிலிருந்து வந்து விட்டது.அதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இது தான் முடிவு” என்று தற்கொலை குறிப்பு எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்.

அதிகாரிகள் பிளாக் பாந்தர் என்பது ஆன்லைன் விளையாட்டாக இருக்கக் கூடும் என்று யூகிக்கின்றனர். இளைஞர் மாலி தன்னை ப்ளாக் பாந்தர் என்று குறிப்பிடுகிறார்.

கையால் எழுதப்பட்ட குறிப்பில் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் ப்ளாக் பாந்தரின் வரைபடமும் சூரியன் மீண்டும் பிரகாசிக்கும் என்று எழுதப்பட்டும் இருந்தது. 

குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்த போது மாலி புளூவேல் போன்ற ஏதோவொரு ஆன்லைன் கேம் விளையாடியதாக தெரிவித்தனர்.  அந்த விளையாட்டுக்கு அடிக்ஸன் ஆகிவிட்டார். மாலியின் அம்மா “குழந்தைகள் அதிகம் மொபைலை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள். நான் என் மகனை இழந்து விட்டேன்.” என்று தெரிவித்தார்.

புளூவேல் கேம்மினால் நிறைய இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் டாஸ்க் முடிப்பதாக கூறி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

உலக சுகாதார நிறுவனம் இந்த ஆன்லைன் விளையாட்டு மோகத்தை டிஜிட்டல் கேமிங்க் டிஸ் ஆர்டர் என்று குறிப்பிடுகின்றனர். 

.