வாஜ்பாய் மறைவு: "அனைவரும் பாராட்டக்கூடிய பிரதமர்" - முதலமைச்சர் நாரயணசாமி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
வாஜ்பாய் மறைவு:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். வாஜ்பாயின் மறைவிற்கு முக்கிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் படத்திற்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் இன்று ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த அக்கரை காட்டியவராக வாஜ்பாய் இருந்துள்ளார். அனைத்து தரப்பினரும் பாராட்டக்கூடிய பிரதமராக இருந்தவர் வாஜ்பாய் என்று முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, டில்லியில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்த முதலமைச்சர் நாரயணசாமி டில்லி புறப்பட்டு சென்றார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................