This Article is From Aug 12, 2020

“எது சிறந்ததோ அதை கடவுள் அவருக்கு செய்யட்டும்” பிரணாப் முகர்ஜியின் மகள் உருக்கம்!

அவரது சகோதரியும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் அவருக்காக பிர்பூமின் கிர்னாஹாரில் உள்ள வீட்டில் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

“எது சிறந்ததோ அதை கடவுள் அவருக்கு செய்யட்டும்” பிரணாப் முகர்ஜியின் மகள் உருக்கம்!

பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் பாரத ரத்னா விருதைப் பெற்றார்.

ஹைலைட்ஸ்

  • பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற 72 மணி நேர யஜ்ஞை பூஜை ஏற்பாடு
  • ராஜ்நாத் சிங் மருத்துவமனைக்கு சென்று முகர்ஜியின் உடல்நிலையை விசாரித்தார்
  • ராம்நாத் கோவிந்த் ஷர்மிஸ்தாவிடம் தொடர்பு கொண்டு உடல் நலத்தை விசாரித்தார்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 23 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவு மற்றும் கொரோனா தொற்று காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று இன்று காலை மருத்துவமனை தெரிவித்திருந்தது. முன்னதாக அவர் மூளை அறுவை சிகிச்சை செய்திருந்தார். தற்போது செயற்கை சுவாச கருவியின் உதவியால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவருமாகிய, ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தை குறித்து சமீபத்தில்  ட்வீட் செய்துள்ளார். அதில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி என் தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த நாள் என் வாழ்நாளின் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. இந்நிலையில் ஓராண்டுக்கு பின்னர் அதே ஆகஸ்ட் 10-ம் தேதி தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். கடவுளே என் தந்தைக்கு எது சிறந்ததோ அதை செய். அதே நேரத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றுபோலவே அணுகும் சக்தியையும் எனக்கு வழங்கிடு. அனைவரது அன்புக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடந்த பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர், கடந்த ஜனவரியில் விருது பெறுபவரின் பெயர் பட்டியலில் பிரணாப் முகர்ஜியின் பெயர் இடம் பெற்றபோது, அவரை "நம் காலத்தின் சிறந்த அரசியல்வாதி" என அனைவரும் பாராட்டினர்.

ஆகஸ்ட் 10, 2020 அன்று மூளை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை ஒன்றை பிரணாப் செய்துகொண்டார். அதன் பின்னர் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். எனவே தன்னுடன் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரணாப் டிவிட் செய்திருந்தார்.

geh9tv78

பிரணாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பல அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் தங்கள் விருப்பத்தினை தெரிவித்திருந்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஷர்மிஸ்தா முகர்ஜியுடன் தொடர்புக் கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.

முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்களன்று ஆர் அன்ட் ஆர் மருத்துவமனைக்குச் சென்று பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். சிங் சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் மூதாதையர் இடத்தில் செவ்வாய்க்கிழமை 72 மணி நேர யஜ்ஞை பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது. அவரது சகோதரியும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் அவருக்காக பிர்பூமின் கிர்னாஹாரில் உள்ள வீட்டில் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

(With inputs from PTI)

.