This Article is From Jun 24, 2019

பீகார் குழந்தைகள் மரணத்திற்கு லிச்சி பழங்கள் அல்ல வறுமையே காரணம்

மூளைக்காய்ச்சல் வைரஸினால் உருவாகிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி மற்றும் கைகால் வலிப்பும் பக்கவாதம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படும். கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 383 குழந்தைகளில் 100 பேர் இறந்துள்ளனர்.

Bihar:

மூளைக்காய்ச்சல் நோயால் 150க்கு மேற்பட்ட குழந்தைகள் பீகாரில் இறந்துள்ளதையடுத்து மத்திய அரசு இதற்கான சரியான காரணத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. குழந்தைகளின் இறப்புக்குப் பின்னால் ஒரு முக்கிய காரணியாக வறுமைதான் லிச்சி பழங்கள் அல்ல என ஆரம்பகட்ட கணக்கெடுப்பு கூறியுள்ளது.

பீகார்  முசாஃபர்பூர்  மாவட்டத்தில் 289 குடும்பங்களில் 280 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் அன்றாட தினக்கூலிகளாகவே உள்ளனர். இந்த குடும்பத்தில் வெறும் 29 சிறுமிகள் முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனாவின் பயனாளிகளாக இருந்தனர். இது பெண் குழந்தைகளுக்கு பண உதவி வழங்கும் திட்டமாகும். 91 குடும்பங்கள் பிரதமர் வீட்டு திட்ட சலுகைகளை பெற்றுள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். 96 பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. 124 குடும்பங்களுக்கு கடந்த மாதம் பொழுது விநியோக முறையிலிருந்து ரேஷன் கிடைக்கவில்லை. இந்த குடும்பங்களில் 159 பேருக்கு மட்டுமே தங்கள் குழந்தைகளை முசாஃபர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைத்தது. 

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 383 குழந்தைகளில் 100 பேர் இறந்துள்ளனர். 223 பேர் பெண் குழந்தைகளும் 159 ஆண் குழந்தைகளும் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நோயாளிகள்  (84 பெண் குழந்தைகள் மற்றும் 51 சிறுவர்கள்) 1-3 வயதிற்குட்பட்டர்கள் லிச்சி பழத்தோட்டங்களை பார்வையிட வாய்ப்பில்லை. 3-5 வயதுக்குட்பட்ட 70 பெண்கள் மற்றும் 43 சிறுவர்கள், 5-7 வயதில் 36 பெண்கள் மற்றும் 31 சிறுவர்கள், 7-9 வயதில் 19 பெண்கள் மற்றும் 14 சிறுவர்கள், 9-11 வயதில்  10 சிறுவர்கள் மற்றும் 7 பெண் குழந்தைகளும் 11 வயதில் 7 சிறுவர்களும் மற்றும் ஒரு பெண்ணும் உள்ளனர். நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் (97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து இருந்தது. 

மூளைக்காய்ச்சல் வைரஸினால் உருவாகிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி மற்றும் கைகால் வலிப்பும் பக்கவாதம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படும். கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

இந்த நோய்க்கான துல்லியமான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான மருத்துவர்கள் வெப்ப அலைத்தாக்கத்தால் ஏற்படுவதாக கூறுகின்றனர். லிட்சி பழத்தினை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக மக்கள் சிறந்த சுகாதார சேவையை பெற்றிருந்தால் மரணங்கள் தவிர்க்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

கடந்த ஆண்டு உலகளவில் பசி குறியீட்டில் 119 நாடுகளில் 103 வது இருந்தது. தனது தேசிய வருமானத்தில் ஒரு சதவீதத்திற்கும் மேலாக சுகாதாரத்திற்காக செலவிடும் நாடாக இது உள்ளது. இது உலகளவில் மிகக் குறைந்த ஒன்றாகும். 

.