This Article is From Aug 18, 2020

மூன்று சொகுசு கார்கள் மோதி விபத்து! 4 மில்லியன் டாலர் இழப்பு!!

மெர்சிடிஸ், போர்ஷே மற்றும் புகாட்டி சொகுசு கார்கள் மோதிய விபத்தில் 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது

மூன்று சொகுசு கார்கள் மோதி விபத்து! 4 மில்லியன் டாலர் இழப்பு!!

கார்கள் ஒன்றையொன்று முந்தும் போது விபத்து ஏற்பட்டது

சுவிட்சர்லாந்தில் விலையுர்ந்த மூன்று சொகுசு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர். இந்த விபத்தால் 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மெர்சிடிஸ் -பென்ஸ் சி, போர்ஷே 911 மற்றும் புகாட்டி சிரோன் ஆகியவை விலை உயர்ந்த கார்களாகும். இந்த கார்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள கோட்ஹார்டு பாஸ் என்ற பகுதியில் செல்லும் போது, ஒன்றையொன்று ஓவர்டேக் செய்தன.அப்போது ஏற்பட்ட கோர விபத்தில் காரின் முன்பக்கம் சுக்குநூறாக நொறுங்கியது. 

இருப்பினும் இந்த கோர விபத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. ஒருவர் மட்டும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 

சொகுசு கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், போர்ஷே 911 காரும், புகாட்டி காரும் பலத்த சேதமடைந்துள்ளது.  குறிப்பாக போர்ஷே 911 காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. 

விபத்துக்குள்ளான இடமானது மலைப் பகுதியாகும். அங்கு மெதுவாக செல்ல வேண்டும். ஆனால், சொகுசு கார்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியால், ஒன்றையொன்று முந்தும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கும் போது, சொகுசு கார்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தால் சுமார் 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் அந்த பகுதி தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றன. கார்கள் சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

Click for more trending news


.