This Article is From Dec 16, 2018

பெர்த் டெஸ்ட்: 175 ரன்கள் முன்னிலை நிதானமாக ஆடும் ஆஸ்திரேலியா

முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை துவ‌ங்கி ஆடி வருகிறது.

பெர்த் டெஸ்ட்: 175 ரன்கள் முன்னிலை நிதானமாக ஆடும் ஆஸ்திரேலியா

இந்தியா நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்திலிருந்தனர். இந்த ஸ்கோருடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா மூன்றாவது பந்திலேயே துணை கேப்டன் ராஹானேவை இழந்தது. நேற்றைய ஸ்கோருடன் ஒரு ரன் கூட சேர்க்காமல் லயன் பந்துல் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பின்னர் பொறுப்பாக ஆடிய கேப்டன் கோலி, இளம் வீரர் விஹாரியின் துணையும் சதமடித்தார். இது விராட் கோலியின் 25வது சதமாகும். இதன் மூலம் டெஸ்டில் 25 சதமடித்த இன்ஸமாம் உல் ஹக்கின் எண்ணிக்கையை சமன் செய்தார். அதேபோல் 25வது சதம் எனும் சாதனையை எட்டும் 4வது இந்திய வீரர் விராட் கோலி ஆவார்.

விஹாரி 20 ரன் எடுத்திருந்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரும் விராட் கோலியும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக இந்திய கேப்டன் கோலி 123 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஹேண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதன் பின் இந்தியாவின் பேட்டிங் சற்று தடுமாறத் துவங்கியது. அதன் பின் வந்த ஷமி தான் சந்தித்த முதல் பந்திலேயே லயன் பந்தில் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பன்ட் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ஹேசல்வுட், லயன் தலா 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் 31 ரன்களை சேர்த்து இழந்தது. ரிஷப் பன்ட் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை துவ‌ங்கி ஆடி வருகிறது.

43 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா துவக்கம் முதல் சிறப்பாக ஆடி வந்தது. தேநீர் இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்கஸ் 7 ரன்களுடனும், கவாஜா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். பின்ச் 25 ரன் எடுத்த நிலையில் ஷமி வீசிய பந்தில் கையில் காயம் ஏற்பட்டு ரிட்ட்யர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின் போது 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

43 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்தது. பின்ச் 25 ரன் எடுத்த நிலையில் ஷமி வீசிய பந்தில் கையில் காயம் ஏற்பட்டு ரிட்ட்யர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் பொறுமையான ஆட்டத்தையே கையாண்டனர். துவக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் பும்ராஹ் பந்தில் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.மார்ஷ் 5 ரன்னுக்கும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்னுக்கும், ஹெட் 19 ரன்னும் வெளியேறினர். 

மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா 41 ரன்களுடனும், கேப்டன் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்துயுள்ளனர்.

ஆஸ்திரேலியா தற்போது 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இந்த போட்டி முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

.