This Article is From Sep 29, 2018

நீதிமன்ற வளாகத்தில் சாட்சியங்கள் மீது துப்பாக்கிச்சூடு

ராஜஸ்தானில் நடந்த மெஹ்லுகான் கொலை வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் சாட்சியங்கள் மீது துப்பாக்கிச்சூடு

பசுவை கடத்தியதாக கூறி மெஹ்லு கான் என்பவர் தாக்கப்பட்ட காட்சி

Jaipur:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெஹ்லுகான் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின்போது பசுவை கடத்தியதாக கூறி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், விபின் யாதவ் என்பவர் உள்பட 9 பேர் மீது மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது.

முன்னதாக இதுகுறித்து கூறிய விபின் யாதவ், பசுவை கடத்தியவர்கள் வாகனத்தை நிறுத்தவில்லை எனவேதான் நாங்கள் விரட்டிச் சென்று அவர்களை பிடித்து அடித்தோம் என்றார்.

இந்த நிலையில் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு இன்றைக்கு விசாரைணைக்கு வந்தது. அப்போது, சாட்சியங்களான பெஹ்லு கானின் மகன்கள் ஆரிப், இர்ஷாத், மற்றும் ரபிக், அஸ்மத் ஆகியோர் தங்களது வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்களை ஒரு கார் மறித்தது. இதையடுத்து காருக்குள் இருந்தவர்கள் சாட்சியங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும் அதிர்ஷ்ட வசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து ஆல்வார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

.