This Article is From Jan 14, 2019

''உரி, பதான்கோட் சம்பவங்களை என்னவென்று சொல்வது?''- நிர்மலாவுக்கு ப.சிதம்பரம் பதிலடி

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டில் இருந்து எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் பாகிஸ்தானின் முயற்சியால் நடக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா கூறியிருந்தார்.

''உரி, பதான்கோட் சம்பவங்களை என்னவென்று சொல்வது?''- நிர்மலாவுக்கு ப.சிதம்பரம் பதிலடி

பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கைக்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.

New Delhi:

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாகிஸ்தானின் தூண்டுதலின்பேரில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ''உரி மற்றும் பதான்கோட்டில் நடந்த தாக்குதல்களை என்னவென்று சொல்வது'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ''2014-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் இருந்து எந்தவொரு தீவிரவாத தாக்குதல்களும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார். அவர் இந்தியா மேப்பை எடுத்துக் கொண்டு, அதில் உரி மற்றும் பதான்கோட் பகுதிகள் எங்கு இருக்கிறது என்று பார்க்கட்டும்.

பாகிஸ்தானில் இருந்து எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இந்தியா மீது நடக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா கூறுகிறார். அப்படியென்றால் உரி, பதான்கோட் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என்று சொல்கிறாரா?'' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி தனது ட்விட்டர் பதிவில்,'' பாதுகாப்பு அமைச்சர் உண்மை சொல்கிறார் என்றால் உரி மற்றும் பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். அவற்றை நாம் எப்படி அழைப்பது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உரி மற்றும் பதான்கோட்டில் கடந்த 2016-ல் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன.

.