This Article is From Jul 11, 2018

மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ரயில்வே தண்டவாளங்களில் 200 மிமீ முதல் 460 மிமீ வரை மழை நீர் தேங்கி இருப்பதால் 150க்கும் அதிகமான புறநகர் ரயில்சேவைகள் ரத்து

மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Mumbai:

மும்பை : மும்பையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நீர் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் பெய்து வரும் கனமழையின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3wu4cq8k3lz

தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் 200 மிமீ முதல் 460 மிமீ வரை மழை நீர் தேங்கி இருப்பதால் 150க்கும் அதிகமான புறநகர் ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

4ijfozf2l4

மும்பையின் பலபகுதிகளிலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கடந்த இரு தினங்களாக இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதையடுத்து தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்ததால், மக்களை மீட்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

c3opz95xoza

சாலைகளில் மழை நீர் முட்டி அளவிற்கு தேங்கி இருப்பதால் தானே, ஹிந்த்மட்டா, குர்லா, சியோன், தாதர், மாதுங்கா, ஆண்டாப் ஹில், பரேல், சாண்டா க்ரூஸ், பாந்த்ரா, கார், காண்டிவிலி, கூர்கான், அந்தேரி, ஜுஹூ உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நீரை வெளியேற்ற மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

zly126ctmfl

இதுவரை பேரிடர் தடுப்பு மையத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பாதிப்புகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. அந்தப் பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

8zmwtxsunm

தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, பல்வேறு இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தார்.

avvgnft452

இதுகுறித்து வானிலை மையத்தின் துணை இயக்குநர் கே.எஸ் ஹோசாலிகர் பேசுகையில், மும்பை, தானே, பால்கர், நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்றும், இன்னும் சில தினங்களில் மழையின் தீவிரம் குறையும் என்று தெரிவித்துள்ளார்.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.