This Article is From Jul 21, 2020

நாளை முதல் பெங்களூரூவில் பொது முடக்கம் ரத்து!

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள்

நாளை முதல் பெங்களூரூவில் பொது முடக்கம் ரத்து!

நாளை முதல் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பொது முடக்கம் ரத்து செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் இருக்கும் என மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரூவில் கடந்த 14-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் முழு முடக்கம் நீக்கப்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் முழு முடக்கம் ஏதும் நாளை முதல் இல்லையென அவர் கூறியுள்ளார்.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது முதல்வர் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

65 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கண்காணிக்கவும், பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் இந்நடைமுறையை தீவிரப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது பெங்களூரில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கைகள் நகரத்தில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளன, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் இல்லாததால் நோயாளிகளைக் கொண்டு செல்லக்கூடிய பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த பிரச்னை குறித்தும் எடியூரப்பா விளக்கம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

.