அங்கன்வாடியில் மகளை சேர்த்த நெல்லை மாவட்ட ஆட்சியர்

அங்கன்வாடியை மக்கள் மத்தியில் அரசு அதிகாரியான தாங்கள்தான் பிரபலப்படுத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கூறியுள்ளார்.

அங்கன்வாடியில் மகளை சேர்த்த நெல்லை மாவட்ட ஆட்சியர்

Collector Shilpa Prabhakar: நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் ஷில்பா பிரபாகர்.

Tirunelveli:

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தனது மகளை அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறது.

2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவை சேர்ந்த ஷில்பா பிரபாகர், நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் ஆவார். அங்கன்வாடியில் மகளை சேர்த்தது குறித்து ஷில்பா கூறுகையில், ''அரசு அதிகாரிகளான தாங்கள்தான் அங்கன்வாடியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும்.

அங்கன்வாடியில் அனைத்து வித வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தரமான ஆசிரியர்கள், அடிப்படை கட்டமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் என அனைத்தும் உள்ளன'' என்று கூறியுள்ளார்.

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் உதவியால் குழந்தைகளின் எடை, வளர்ச்சி, உடல்நலம் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வைக்கப்படுகிறது.

More News