This Article is From Oct 31, 2018

துப்பாக்கிச்சூட்டிற்கு இடையே தூர்தஷன் ஊழியர் தாய்க்கு உருக்கமான வீடியோ!

தாக்குதல் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பின்பும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகள் சத்தம் ஒலித்தது.

பாதுகாப்பு அதிகாரிகளுக்காக காத்திருந்த போது மோர்முகூத் சர்மா ஒரு சில வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

New Delhi:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலின் இடையே மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் உதவி ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது தாய்க்கு தனது கடைசி செய்தியை பதிவு செய்துள்ளார்.

அதில், இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடந்து வருகிறது. நாங்கள் தந்தேவாடா பகுதியில் இருக்கிறோம். தேர்தல் செய்திகளை பதிவு செய்ய இங்கே வந்திருந்தோம். எங்களுடன் ராணுவ வீரர்கள் உள்ளனர். திடீரென நாங்கள் நக்சலைட்டுகளால் சூழப்பட்டோம்.

அம்மா, நான் உயிரோடு இருந்தால்.. அம்மா, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இந்தத் தாக்குதலில் நான் கொல்லப்பட வாய்ப்புள்ளது. இங்கு சூழல்நிலை சரியானதாக தெரியவில்லை. நாங்கள் சூழப்பட்டுள்ளோம் என்கிறார். மேலும், அவர் தனது தாய்க்கு ஆறுதல் அளிக்கும் முயற்சியில், ஏன் என்று தெரியவில்லை, மரணத்தை எதிர்நோக்கும் போதும் எனக்கு எந்த பயமும் இல்லை என்கிறார். 

மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் செய்தியாளர் சர்மா உயிர்தப்பினார். மூத்த ஒளிப்பதிவாளர் அச்சுதானந்தா சாஹூ, 30, கொல்லப்பட்டார். அடுத்த மாதம் நடைபெற உள்ள சத்தீஸ்கர் தேர்தல் குறித்து தூர்தஷன் குழுவானது செய்தி சேகரிக்க சென்றிருந்தது. 20 வருடங்களாக வாக்களிக்காத ஒரு பகுதிக்கு ராணுவத்தினருடன் 3 பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். 

செவ்வாயன்று காலை 10 மணி அளவில், அவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு முன்னர், ஒளிப்பதிவாளர் அச்சுதானந்தா சாஹூ சாலையை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பெரும் சத்தத்துடன் சரிந்து விழுந்தார். இதன் பின்னரே தாங்கள் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்களால் சூழப்படுள்ளோம் என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. 

இந்த தாக்குதல் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பின்பும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகள் சத்தம் ஒலித்துள்ளது. மற்றொரு பத்திரிகையாளர் சாலையில் உள்ள பள்ளத்தில் மறைந்து கொண்டிருந்துள்ளார். 

இதனிடையே, பாதுகாப்பு அதிகாரிகளுக்காக காத்திருந்த போது மோர்முகூத் சர்மா ஒரு சில வீடியோக்களை பதிவு செய்துள்ளார். 

.