This Article is From Dec 28, 2018

ஒரு முதல்வர் என்றும் பாராமல்… கெஜ்ரிவாலுக்கு வந்த சோதனை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பலர் வெவ்வேறு வகையில் கேலி செய்துள்ளனர். ஆனால், இப்படியொரு சோதனை அவருக்கு வந்திருக்காது

ஒரு முதல்வர் என்றும் பாராமல்… கெஜ்ரிவாலுக்கு வந்த சோதனை!

கெஜ்ரிவால் அவரது இருமலுக்காக கேலி செய்யப்படுவது இது முதல் முறையல்ல

ஹைலைட்ஸ்

  • பொது நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் கேலி செய்யப்பட்டுள்ளார்
  • கேலி செய்தவர்கள் பாஜக-வினர் என்று சொல்லப்படுகிறது
  • அமைச்சர் நிதின் கட்கரிதான், கேலி செய்தவர்களை கண்டித்தார்
New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பலர் வெவ்வேறு வகையில் கேலி செய்துள்ளனர். ஆனால், இப்படியொரு சோதனை அவருக்கு வந்திருக்காது. 

யமுனை ஆற்றை சுத்தப்படுத்தும் நோக்கில், மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகள் நேற்று கூட்டாக இணைந்து ஒரு திட்டத்தை அரம்பித்தன. இதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி மற்றும் சத்யபால் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது உரையாற்ற மைக்கை நோக்கி கெஜ்ரிவால் வந்தபோது, ஸ்டேஜுக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஒன்றாக எழுந்து, கோரஸாக இருமியுள்ளனர். கெஜ்ரிவால், கடந்த காலங்களில் இருமல் தொடர்பான பிரச்னைகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். அதை  சரி செய்து கொள்வதற்காக, பெங்களூருவில் இருக்கும் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2016, செப்டம்பரில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் இருமல் தொடர்பான பிரச்னை அவருக்கு வெகுவாக குறைந்தது.

இதை கேலி செய்யும் விதத்தில்தான், நிகழ்ச்சியின் போது ஒரு குழு அப்படி செய்ததாக தெரிகிறது. சம்பவம் நடந்த சில நொடிகளில் இருமிக் கொண்டிருந்தவர்கள் அருகில் வந்த அமைச்சர் நிதின் கட்கரி, ‘இது ஒரு பொது நிகழ்ச்சி. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்' என்று கண்டித்தார். இந்த சம்பவம் தற்போது வைரலாக பரபரக்கப்பட்டு வருகிறது. 

கெஜ்ரிவால் அவரது இருமலுக்காக கேலி செய்யப்படுவது இது முதல் முறையல்ல. காங்கிரஸ் நிர்வாகி நவ்ஜோத் சிங் சித்து, இதற்கு முன்னர் கெஜ்ரிவாலின் இருமலை கிண்டல் செய்யும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதுவும் வைரலானது.

.