மெட் கேலா 2019: பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனின் அட்டகாசமான ரெட் கார்பெட் லுக்

பிரியங்கா சோப்ரா இறகுகுகளால் ஆன உடையை அணிந்து வித்தியாசமான தலையலங்காரம் மற்றும் கிரீடத்துடன் வந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மெட் கேலா 2019: பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனின் அட்டகாசமான ரெட் கார்பெட் லுக்

பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் (Images courtesy AFP)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. பிரியங்கா சோப்ரா ஆப்ரிக்க சுருள் முடியுடன் வந்திருந்தார்.
  2. தீபிகா பிங்க் நிறத்தில் கவுன் அணிந்திருந்தார்.
  3. ஹை பஃவ் போனி டெயில் ஹேர் ஸ்டைலில் வந்திருந்தார்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் மெட் காலா 2019 விழா நடைபெற்று வருகிறது. இதில் ரெட் கார்ப்பெட்டில் பிரபலங்கள் பலர் நடந்து வந்தன.  பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் வித்தியாசமான உடை அலங்காரத்துடன் வந்தனர். பிரியங்கா சோப்ரா இறகுகுகளால் ஆன உடையை அணிந்து வித்தியாசமான தலையலங்காரம் மற்றும் கிரீடத்துடன் வந்தார். உடன் காதலன் நிக்கும் வந்திருந்தார். தீபிகா படுகோன் பெரிய கவுனுடன் ஹை பஃவ் தலையலங்காரத்துடன் வந்திருந்தார். 

பிரியங்கா சோப்ராவின் மெட் காலா 2019 தோற்றத்தை இணையத்தில் கேலி கிண்டலுடன் பகிர்ந்து வருகின்றனர். 36 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா ஷீர் கவுன் தை- ஹை ஸ்லிப்புடன் இறகுகளால் ஆன உடையை அணிந்து வந்தார். தலைமுடியும் அதில் வைத்த கிரீடமும் வித்தியாசமான தோற்றத்தை அளித்தது.
 

l5euckng

தீபிகா படுகோன் மிகவும் பாதுகாப்பான உடை அலங்காரத்தையே தேர்வு செய்திருந்தார்.அதீதிமான உதட்டுச்சாயமும் சிறப்பான கண் அலங்காரத்தையும்செய்திருந்தார். 

6l95s5o

இந்த ஆண்டு மெட் காலா 2019க்கான தீம் 1964 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளர் சூசன் சோண்டக் எழுதிய முகாம்: ஃபேஷன் பற்றிய சில குறிப்புகள் ("Camp: Notes on Fashion.") என்றதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த தீமின் நோக்கமே முகாம் என்பது போர் போன்ற சவாலான சூழலை எதிர்கொள்ளும் இடம். ஆனாலும் இறுதியில் பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையும் இதயங்களில் மகிழ்ச்சியையும் உருவாக்கும் அதன் அடிப்படையிலேயே உடைகளை உருவாக்கியுள்ளோம் என்று ஆடை வடிவமைப்பாளர் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரூ போல்டன் கூறியுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................