This Article is From Jul 18, 2018

லக்கி டிரா முடியும் நேரத்தில் ஜாக்பாட் அடித்த ப்ரிட்டிஷ்காரர்

சக வாடிக்கையாளர் வழி விடாமல் போயிருந்தால், டிரா நேரம் முடிந்து இருக்கும், பரிசும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை

லக்கி டிரா முடியும் நேரத்தில் ஜாக்பாட் அடித்த ப்ரிட்டிஷ்காரர்

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 32வயது வார்ஷா என்பவர், லக்கி டிரா முடியும் சில நிமிடங்களில், ஒரு மில்லியன் பவுன்ஸ் லோட்டோ லாட்டரி பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

லக்கி டிப் டிக்கெட்டை, டிரா நேரம் முடியும் முன்பு சரிபார்க்க வேண்டும். டிரா முடிய சில நிமிடங்களே இருந்த போது, சூப்பர் மார்கெட்டில் நுழைந்த திரு.வார்ஷாவிற்கு வாடிக்கையாளர் ஒருவர் வழி விட்டுள்ளார். டிராவை சரிபார்த்த வார்ஷாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் கொடுத்த டிக்கெட்டிற்கு, ஒரு மில்லியன் பவுன்ட்ஸ் பரிசு விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. சக வாடிக்கையாளர் வழி விடாமல் போயிருந்தால், டிரா நேரம் முடிந்து இருக்கும், பரிசும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

வெற்றி பெற்ற பணத்தை வைத்து, தன் கனவு காதலியை திருமணம் செய்யப்போவதாக திரு.வார்ஷா மகிழ்ச்சியில் கூறினார். மேலும், கார், பங்களா வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்தில், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருத்தர், கடந்த 18 மாதங்களில் இரண்டு முறை ஒரு மில்லியன் யூரோஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.