வீடியோ பார்க்கும் போது இது ஏதோ ஏமாற்று வித்தை என்றே தோன்றுகிறது.
உங்களின் கண்களால் பார்ப்பதையே நம்ப முடியாத வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒருவர் மூன்று ரூபிக் க்யூப்ஸை தூக்கி போட்டு பிடித்துக் கொண்டே அந்த புதிரை தீர்த்து விடுகிறார். கலைந்து கிடக்கும் வண்ணங்களை அந்தந்த வண்ணத்துடன் இணைத்து நம்மிடம் காட்டுகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
வீடியோ, நபர் ஒருவர் வண்ணம் கலைந்த மூன்று ரூபிக் க்யூப்ஸை காண்பித்து விட்டு தூக்கி போட்டு பிடிக்கத் துவங்கிறார். சில விநாடிகளிலேயே மூன்று க்யூப்ஸையும் தீர்த்தும் காட்டுகிறார். வீடியோ பார்க்கும் போது இது ஏதோ ஏமாற்று வித்தை என்தே தோன்றுகிறது.
வீடியோவை கீழே பார்க்கலாம்:
இந்த வீடியோ ட்விட்டரில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இருப்பினும் பலர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். வண்ண கலைந்த் க்யூப்ஸை தூக்கி எறிந்து விட்டு வண்ணங்கள் சேர்த்த க்யூப்ஸை சுழற்றுவது போல் தெரிகிறது என்று தெரிவிக்கின்றனர்.
சிலர் இந்த வீடியோ ரிவர்ஸாக இயக்கப்படுவதாக கூறுகின்றனர்.
Click for more
trending news