This Article is From Jul 18, 2018

நீட் தேர்வு எழுதாமல் படித்த மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நீட் நுழைவுத்தேர்வு எழுதாமல் இரண்டு ஆண்டுகள் பல் மருத்துவப் படிப்பை முடித்த பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எட்டு பேரின் சேர்க்கையை ரத்து செய்த பல் மருத்துவக் கவுன்சில உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது

நீட் தேர்வு எழுதாமல் படித்த மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நீட் நுழைவுத்தேர்வு எழுதாமல் இரண்டு ஆண்டுகள் பல் மருத்துவப் படிப்பை முடித்த பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எட்டு பேரின் சேர்க்கையை ரத்து செய்த பல் மருத்துவக் கவுன்சில உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரம் அவர்களது 2 ஆண்டுகள் வீணானதற்கு இழப்பீடாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூ. 25 லட்சம் இழப்பீட்டை 45 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயலில் உள்ள சவிதா பல்கலையில் கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டில் 13 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், மருத்துவப் படிப்பில் யாரையும் சேர்க்க முடியாது என இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில்  மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 8 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பல் மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வில் வெற்றி பெறாமல், எந்த ஒரு மாணவரையும் மருத்துவக் கல்வியில் அனுமதிக்க முடியாது என வாதிட்டார்.

இந்த 8 மாணவர்களும் நீட் தேர்வு எழுதாததால் இவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி வைத்தியநாதன், 8 மாணவர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், 8 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்து விடக்கூடாது என்பதால் 8 மாணவர்களுக்கும் அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தை திருப்பி அளிக்கவும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பல்கலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். கல்விச் சான்றிதழ்களையும் மாற்றுச் சான்றிதழையும் வழங்கவும் உத்தரவிட்டார்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.