This Article is From May 21, 2019

மத்திய பிரதேச அரசு பிரக்யா தகூர் மீதான கொலை வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறது

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் மீண்டும் பழைய கொலை வழக்கை விசாரிக்க சட்ட ரீதியான வாய்ப்புகள் உள்ள என விசாரணையில் இறங்கியுள்ளது

மத்திய பிரதேச அரசு பிரக்யா தகூர் மீதான கொலை வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறது

கொலை வழக்கில் போதிய ஆதாரம் இன்றி நீதிமன்றம் விடுதலை செய்தது (File)

Bhopal:


மத்திய பிரதேச அரசு,  பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தகூர் மீது உள்ள பழைய கொலை வழக்கினை மீண்டும் விசாரிக்க உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பிரக்யா சிங் தகூர் வெற்றி பெறுவார் என்று தெரியவந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் மீண்டும் பழைய கொலை வழக்கை விசாரிக்க சட்ட ரீதியான வாய்ப்புகள் உள்ள என விசாரணையில் இறங்கியுள்ளது. தவாஸ் மாவட்டத்தில் சுனில் ஜோஸி டிசம்பர் 29, 2007 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். பிரக்யா தகூர் மற்றும் ஏழு குற்றவாளிகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் 2017இல் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது.

சுனில் ஜோஷி கொலை வழக்கு தொடர்பாக மாநில அரசு உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று பிசி ஷர்மா தெரிவித்தார். இந்த வழக்கு குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரை சமர்பிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரக்யா தகூர் 2008 நடந்த குண்டு வெடிப்பு வழக்கிலும் குற்றவாளி பட்டியலில் இருந்து பெயிலில் வெளியாகி உள்ளார்.

இதை பாஜக பழிவாங்கும் அரசியல் செயல்பாடு என்று கூறியுள்ளது. 

.