''கையில் ரூ. 1.76 லட்சம் கோடி; கடன் 4 லட்சம் கோடி ரூபாய்'' - அதிர வைத்த தென்சென்னை வேட்பாளர்

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் ஜெபமணி மோகன் ராஜ் என்பவர் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பேசப்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை தனது சொத்தாகவும், தமிழக அரசின் கடன் தொகையை தனது கடனாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''கையில் ரூ. 1.76 லட்சம் கோடி; கடன் 4 லட்சம் கோடி ரூபாய்'' - அதிர வைத்த தென்சென்னை வேட்பாளர்

ஜெபமணி அளித்துள்ள விவரங்கள் உண்மையாக இருந்தால் நாட்டிலேயே அவர்தான் பணக்கார வேட்பாளராக இருப்பார்.


Chennai: 

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் தனக்கு ரூ. 1.76 லட்சம் கோடி ரூபாய் ரொக்கம் கையில் இருப்பதாகவும், உலக வங்கியில் ரூ. 4 லட்சம் அளவுக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை மக்களவை தொகுதியில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பாக ஜெ. மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை அளித்துள்ளார்.

2ஜி விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக பேசப்பட்டது. அந்த தொகை அளவுக்கு தன்னிடம் பணம் இருப்பதாக ஜெபமணி கூறியுள்ளார். தமிழக அரசின் கடன் சுமை ரூ. 3.97 லட்சம் கோடி உள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் அவர் தனக்கு ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு கடன் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவிலேயே இவர்தான் பணக்கார வேட்பாளராக இருப்பார்.

தான் அளித்தது தவறான தகவல்கள்தான் என்றபோதிலும் அதனை வேண்டுமென்றே ஜெபமணி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''2 ஜி வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. இதுகுறித்து கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகரூ. 1.76 லட்சம் கோடி என்பதனை குறிப்பிட்டேன். தமிழ்நாடு அரசுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. இதனால் மிகப்பெரும் கடன் சுமையில் தமிழகம் இருக்கிறது. இதனை குறிப்பிடும் வகையில் எனது கடன் விவரத்தை அளித்தேன்.

வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் எந்த அளவு தொகை வேண்டுமானாலும் நாம் குறிப்பிடலாம். இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தாது. இதுபோன்ற தவறான தகவல்கள் அளிப்பதை கிரிமினல் குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு பலமுறை தெரிவித்து விட்டேன்.'' என்றார்.

உண்மையிலேயே மோகன் ராஜிடம் அவரது மனைவிக்கு சொந்தமான ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான 13 சவரன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................