This Article is From Mar 21, 2019

விவசாயிகளுக்காக திமுக, தேர்தல் அறிக்கையில் செய்த மாற்றம்..!

மார்ச் 19 ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிக்கை வெளியிட்டார்.

விவசாயிகளுக்காக திமுக, தேர்தல் அறிக்கையில் செய்த மாற்றம்..!

விவசாயிகள் வைத்த கோரிக்கையை அடுத்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Chennai:

ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக எதிர்கட்சியான திமுக சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதில் தற்போது விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளது அக்கட்சியின் தலைமை. 

முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில், சிறிய மற்றும் குறுநிலை விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அனைத்து விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளது. விவசாயிகள் வைத்த கோரிக்கையை அடுத்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக அறிக்கையில் மேலும், விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள், விதைகள் மற்றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. 

மார்ச் 19 ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிக்கை வெளியிட்டார். அதே நாளில் அதிமுக-வும் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதிமுக-வும், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அறிக்கையில் கூறியிருந்தது. 

.