This Article is From Feb 22, 2019

மக்களவை தேர்தல் : திமுகவுடன் – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் மதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மக்களவை தேர்தல் : திமுகவுடன் – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • மதிமுகவுடன் திமுக நிர்வாகிகள் தொகுதி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை
  • முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி தலைமையில் மதிமுகவினர் பங்கேற்பு
  • காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன், மதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தளவில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும்,புதுவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், மாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். தேமுதிகவையும் இழுக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மதிமுகவை கூட்டணி குறித்து பேச வருமாறு திமுக அழைத்திருந்தது. இதன்படி முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி தலைமையிலான மதிமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.