This Article is From Mar 18, 2019

'நீண்ட காலம் மக்கள் பணி செய்தவர்களுக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது' : கனிமொழி பதில்

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

'நீண்ட காலம் மக்கள் பணி செய்தவர்களுக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது' : கனிமொழி பதில்

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி தற்போது உள்ளார்.

Chennai:

குடும்ப அரசியல் ஏதும் கிடையாது என்றும் நீண்ட காலம் மக்கள் பணி செய்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி முதன்முறையாக போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடும்ப அரசியல் திமுகவில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. 

இதற்கு பதில் அளித்துள்ள கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''கட்சியில் இருந்து நீண்ட காலம் மக்கள் பணி செய்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். 

திமுக மூத்த தலைவர் ஆர்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி வடசென்னை தொகுதியிலும், தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியிலும், தமிழச்சி தங்க பாண்டியன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 
 

.