This Article is From Apr 17, 2019

''எதிர்க்கட்சி தலைவர்களைப் பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது?!'' - ப.சிதம்பரம் கேள்வி

தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதனை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.

''எதிர்க்கட்சி தலைவர்களைப் பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது?!'' - ப.சிதம்பரம் கேள்வி

பாரபட்சமான முறையில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் சிதம்பரம்.

Chennai:

எதிர்க்கட்சிகளைப் பற்றி மட்டுமே வருமான வரித்துறையினருக்கு துப்பு கிடைக்கிறது... அது எப்படி என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதனை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். 

தூத்துக்குடி வேட்பாளராக திமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி தொகுதியில் தங்கி பிரசாரம் மேற்கொண்டார். அவரது தூத்துக்குடி வீட்டில் பணப்பட்டுவாடா செய்வதற்கு பணம் பதுக்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

இதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் வருமான வரித்துறையின் சோதனையை குறிப்பிட்டு மத்திய முன்னாள் நிதியமைச்சர்  ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது - 
திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?!. 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

.