This Article is From Oct 03, 2019

தமிழகத்தை உலுக்கிய Lalithaa Jewellery theft; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

Lalithaa Jewellery - ஷோரூமுக்கு 6 இரவு நேரக் காவாளிகள் இருந்தபோதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தை உலுக்கிய Lalithaa Jewellery theft; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

Lalithaa Jewellery - சம்பவத்தின் போது கொள்ளையர்கள் புலி மற்றும் காளை போன்ற முகமூடிகளை (Masks) அணிந்து திருடியுள்ளனர்.

திருச்சியில் (Tiruchy) உள்ள லலிதா ஜுவல்லரி (Lalithaa Jewellery) ஷோரூமில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் (Theft) சென்றுள்ளனர். சம்பவத்தின் போது கொள்ளையர்கள் புலி மற்றும் காளை போன்ற முகமூடிகளை (Masks) அணிந்து திருடியுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு முகமூடி கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லாரி ஷோரூமின் ஒருபக்க சுவரை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள சுமார் 800 நகைகளை திருடிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 13 கோடி ரூபாயாகும். 

ஷோரூமுக்கு 6 இரவு நேரக் காவாளிகள் இருந்தபோதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கடைக்குள் அவர்கள் கழித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்து வரும் அனைத்துத் தகவல்களும் பகீர் ரகமாக இருந்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுவை விசாரிக்க அம்மாவட்ட போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். 

விசாரணைக்காக காவல் துறையினர் வருவதைப் பார்த்த அந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் தான் தங்கியிருந்த மாடி விட்டிலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்படுத்திக் கொண்டார். அதேபோல அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களும், அவர்கள் முன்னும்பின்னுமாக அளித்து வரும் தகவல்களும் போலீஸ் தரப்பில் பலத்த சந்தேகத்தை கிளப்பியிருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த குழுவிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 


 

.