This Article is From Aug 12, 2018

கேரள கனமழை எதிரொலி: 37 பேர் பலி, 31000 பேர் நிவாரண முகாமில்..!

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் கன மழை பொழிந்து வருகிறது

கேரள கனமழை எதிரொலி: 37 பேர் பலி, 31000 பேர் நிவாரண முகாமில்..!
Kochi:

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் கன மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் 14 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்கின்றன. இதுவரை கன மழை காரணமாக 37 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1,031 ஹெக்டர் அளவிலான பயிர்கள் இந்த மழை காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், 31000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் கேரள பேரிடர் மேலாண்மை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

மே 29 ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக, 26,824 ஹெக்டர் அளவிலான 3.42 பில்லியன் ரூபாய் பயிர்கள் நாசமாகியுள்ளதாக ஒரு அரசு அதிகாரி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். 

கேரள பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தலைவர் பி.எச்.குரியன், மழையின் வீரியம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை மழை பாதிப்புகளை நேரில் பார்க்க வருவார் என்றும் கூறியுள்ளார். 

இதுவரை இல்லாத அளவில் கேரள அரசு தரப்பு, 25 அணைகளிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கேரளாவில் 1924 ஆம் ஆண்டுதான் கனமழை பெய்து அதிக சேதகங்களை விளைவித்தது. 

வரும் 15 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள், கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.