This Article is From Jun 26, 2018

5 பெண்கள் பலாத்கார வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

குற்றவாளிகள் 5 பெண்களையும் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது

5 பெண்கள் பலாத்கார வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
ஜார்கண்ட மாநிலத்தில் பள்ளி ஒன்றில் நிக்ழ்ச்சி நடத்த வந்த சேவை அமைப்பைச் சேர்ந்த 5 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான பாதரியார் அல்ஃபோன்சோ ஏலியன் மீது போலீஸின் பார்வை திரும்பியுள்ளது.

கத்தோலிக் பிஷப் கான்ஃப்ரென்ஸ் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர், பிஷப் மாஸ்கரென்ஹஸ், போலீஸ் அல்ஃபோன்ஸோ மீது போலியாக குற்றங்களைச் சுமத்துவதாக கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த டி.ஜி.பி ஆர்.கே.மாலிக் ” அவர் மீது குற்றம்சாட்டப்படவில்லை, தலைமை ஆசிரியர் குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் உள்ளது” என்கிறார்.

அல்ஃபோன்சோ தான் பாதிக்கப்பட்ட 5 பெண்களையும், குற்றவாளிகளுடன் போகச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், பின் அங்கு நடந்த சம்பவம் பற்றி காவல் துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஜார்கண்ட் போலீஸார் கூறியுள்ளனர். ஜூன் 22-ம் தேதி அல்ஃபோன்சோ மீது, சம்பவத்தை மறைக்க முயன்றதாக வழக்கு பதியப்பட்டது. ஆனால் விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், அடையாளம் காட்டும் நடைமுறையின் போது இருவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் குற்றம் செய்ததற்கான பலமான ஆதாரங்கள் உள்ளதாக மாலிக் தெரிவித்துள்ளார்.

“மதம் மற்றும் ஜாதியை அடிப்படையாக வைத்து போலிஸ் யாரையும் கைது செய்வதில்லை. குற்றங்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்படுகின்றனர்” என்கிறார் மாலிக் . “சமப்வம் நடந்த அன்று, பள்ளியில் நாடகம் நிக்ழச்சி நடத்த அல்ஃபோன்சோ, சேவை அமைப்பின் பெண்களை வரச் செய்துள்ளார். அப்போது குற்றவாளிகள் அங்கு வந்துள்ளனர். அப்போது பாதரியார், கன்னியாஸ்திரிகளை மட்டும் விட்டுவிட்டு, 5 பெண்களை அவர்களுடன் போகச் சொல்லியுள்ளார்” என்று விவரிக்கிறார் மாலிக். குற்றவாளிகள் 5 பெண்களையும் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.