ரூ.9.06 லட்சம் செலவில் டெல்லி - மும்பை சிறப்பு விமானம்; பயணிக்கும் செல்லப் பிராணிகள்!

செல்லப் பிராணிகளை அழைத்து வர ஜூன் மாத நடுவாக்கில், 6 இருக்கைகள் கொண்ட ஒரு தனியார் ஜெட் விமானத்தை முன்பதிவு செய்துள்ளார் தீபிகா

ரூ.9.06 லட்சம் செலவில் டெல்லி - மும்பை சிறப்பு விமானம்; பயணிக்கும் செல்லப் பிராணிகள்!

செல்லப் பிராணிகளை அழைத்து வர ஜூன் மாத நடுவாக்கில், 6 இருக்கைகள் கொண்ட ஒரு தனியார் ஜெட் விமானத்தை முன்பதிவு செய்துள்ளார் தீபிகா

கொரோனா வைரஸ் தொற்றால் நம் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக எண்ணிப் பார்க்க முடியாத மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பலரும் தேசிய அளவில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் முழு முடக்க நடவடிக்கைகளால் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் மாட்டிக் கொண்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகத்தான் இந்தியாவில் உள்ளூர் விமான சேவைகள், கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இது மனிதர்களுக்கான விமான சேவையாகவே இருந்தது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், தங்கள் உரிமையாளர்களிடமிருந்து வேறு எங்காவது இருக்கிறதென்றால் என்ன செய்வது?

அதற்கு தீர்வுகான இறங்கினார் மும்பையைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரான தீபிகா சிங் (மும்பை மிரர் தகவல்). டெல்லியிலிருந்து சில சொந்தக்காரர்களை மும்பைக்கு அழைத்து வர சிறப்பு தனியார் ஜெட் விமானத்தை அவர் புக் செய்துள்ளார். அந்த விமானத்திலேயே சில செல்லப் பிராணிகளையும் அழைத்து வந்துவிடலாம் என்று எண்ணியுள்ளார் தீபிகா. ஆனால், விமானத்தில் வந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த யோசனை கைவிடப்பட்டது. ஆனால், ஒரு விமானம் முழுக்க செல்லப் பிராணிகளுக்காக முன்பதிவு செய்தால் என்ன என்கிற யோசனை அவருக்கு வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து செல்லப் பிராணிகளை அழைத்து வர ஜூன் மாத நடுவாக்கில், 6 இருக்கைகள் கொண்ட ஒரு தனியார் ஜெட் விமானத்தை முன்பதிவு செய்துள்ளார் தீபிகா. மொத்த விமானத்துக்கும் 9.06 லட்ச ரூபாய் பட்ஜெட் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு இருக்கைக்கு 1.6 லட்ச ரூபாய் டிக்கெட் பணம். இதுவரை 4 பிராணிகளுக்கு முன்பதிவு உறுதியாகியுள்ளது. 

“6 இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டால் ஒரு இருக்கைக்கு 1.6 லட்ச ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்றால் டிக்கெட் பணம் மேலும் கூடக்கூடும்,” என்கிறார் தீபிகா (தி பிரின்ட் தகவல்). 

தனியார் ஜெட் விமானத் தரப்பு, கோவிட்-19 குறித்தான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், விமானத்தில் வரும் பிராணிகளிடம் முறையான சோதனைகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. விமானப் பயணத்தின்போது பிராணிகள், கூண்டில் வைத்தே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
 

Click for more trending news