This Article is From Aug 10, 2020

ஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

கடந்த 2010-ம் ஆண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெற்று மாநில அரசுக்கு சேவை செய்து வந்த 37 வயதான ஷா ஃபேசல் 2019 ஜனவரியில் தனது வேலையை ராஜினாமா செய்து அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.

ஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

ஷா ஃபேசல் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார்

Srinagar:

கடந்த 2010-ம் ஆண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெற்று மாநில அரசுக்கு சேவை செய்து வந்த 37 வயதான ஷா ஃபேசல் 2019 ஜனவரியில் தனது வேலையை ராஜினாமா செய்து அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இந்திய இஸ்லாமியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றும், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் அரசியல் களத்தில் இறங்கினார்.

இந்நிலையில் அவர் மீது கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கத்திலிருந்து விலகுவதாகவும், அவர் அரசியல் செயற்பாடுகளைத் தொடரக்கூடிய நிலையில் இல்லை என்றும், அமைப்பின் பொறுப்புகளில் இருந்து விடுபட விரும்புகிறார் என்றும், கட்சியின் மாநில நிர்வாக உறுப்பினர்களுக்கு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக அவருடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விலகிக்கொண்டார். அவர் மீண்டும் நிர்வாகத்தில் சேரக்கூடும் என்று உள்ளூர் ஊடகங்களில் வந்த செய்திகள் வந்தாலும், அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்து எந்த தகவலும் அறிக்கையில் இடம் பெறவில்லை.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசினை விமர்சித்த பல அரசியல் தலைவர்களும் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.