This Article is From Dec 12, 2018

'இது வெற்றிகரமான தோல்விதான்' தமிழிசை பெருமிதம்!

சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில், 5 மாநிலங்களில் பாஜக-வினர் மிக மோசமான பின்னடைவை சந்தித்தனர்.

'இது வெற்றிகரமான தோல்விதான்' தமிழிசை பெருமிதம்!

பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர் ‘இன்றைய சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் எங்களுக்கு ஏற்ப்பட போவதில்லை, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மிக குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது, ஏனவே இதை வெற்றிகரமான தோல்வி என்றுதான் சொல்ல முடியும்'என அவர் கூரினார்.

தகவல்கள் படி சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் கடும் போட்டி நிலவி வருகின்ற நிலையில் மிசோரமில் உள்ள மிசோ நெஷ்னல் கட்சியிடம் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து குறிப்பிடத்தக்கது.

.