This Article is From Dec 09, 2019

Viral: இணையத்தைக் கலக்கி வரும் ‘பேசும் பூனை!’

Viral News - இதுவரை டிக்டாக் தளத்தில் மட்டும் காம்பினோவின் வீடியோ 14 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

Viral: இணையத்தைக் கலக்கி வரும் ‘பேசும் பூனை!’

இன்ஸ்டா பக்கத்தில் 6 லட்சம் வியூஸ் எகிறியுள்ளது

Viral News - காம்பினோ என்னும் ஒரு புனை, சமூக வலைதளங்களில் தன் ‘பேசும் திறனுக்காக' வைரலாகி வருகிறது. உண்மையில் அந்த பூனை, ‘மியாவ்' என்றுதான் சொல்கிறது. ஆனால், அது ‘வெல், ஹாய்' என்று சொல்வது போலத் தெரிகிறது. காம்பினோ பேசுவது போல உள்ள வீடியோவை, அதன் உரிமையாளர் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அப்போதிலிருந்து எல்லோரும் அதை வியப்புடன் பார்த்து வருகிறார்கள். 

வீடியோவில், ஒரு பூனையிடமிருந்து ஓடி ஃபிரிட்ஜுக்கு அருகில் மறைந்து கொள்கிறது காம்பினோ. அதைப் பின் தொடருகிறார் காம்பினோவின் உரிமையாளர். அப்போதுதான், “வெல், ஹாய்” என்கின்ற மியாவ் சத்தத்தை ஏற்படுத்துகிறது அந்தச் சுட்டிப் பூனை.

“அவன் வெல், ஹாய் என்று சொல்வது போலவே எனக்குத் தெரிகிறது,” என்று வீடியோவுடன் காம்பினோவின் உரிமையாளர் பதிவிட்டுள்ளார். 

கீழே அந்த வீடியோவைப் பாருங்கள்:
 

இதுவரை டிக்டாக் தளத்தில் மட்டும் காம்பினோவின் வீடியோ 14 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டா பக்கத்தில் 6 லட்சம் வியூஸ் எகிறியுள்ளது. பலரும், தங்களுக்கும் பூனை பேசுவது போலத்தான் இருக்கிறது என்று கமென்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். 

“நான் மீண்டும் மீண்டும் இந்த வீடியோவைப் பார்க்கிறேன். அவன் வெல், ஹாய் என்று சொல்வது போலத்தான் உள்ளது,” என்று ஒருவர் எழுத, “ஹாய் ஸ்வீட்டி,” என்று இன்னொருவர் பதிவிடுகிறார். 

2014 ஆம் ஆண்டு வரை காம்பினோ, தெருப் பூனையாக, ஆதரவற்றே இருந்தான் என்றும் பின்னர்தான் உரிமையாளர் கிடைத்தார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் சொல்கிறது. 

Click for more trending news


.