"சிறந்த கவனிப்பே சிறந்த அறிவு": இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்!

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் எட்டு பேரில் ஒருவர் மட்டுமே அதைப் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று ஐ.நா ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது

New Delhi:

சர்வதேச அளவில் போதை பொருட்கள் ஒழிப்பு மிகப்பெரிய அளவு சவாலாக மேலெழுந்துள்ளது. போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமான இன்று, இளைஞர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்த அச்சுறுத்தலை சமாளிக்க, உலகளவில் மக்கள் அதிக ஒற்றுமையையும் கவனத்தையும் கொண்டிருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் போதைப்பொருள் தடுப்பு நாளின் கருப்பொருள் "சிறந்த கவனிப்பே சிறந்த அறிவு" ஆகும்.

பிரச்சினையின் அளவு மற்றும் போதை பொருட்கள் உடல் மற்றும் மனதை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் உலக நாடுகள் போதை பொருட்களின் புழக்கத்திலிருந்து மீள முடியாது என ஐ.நா குறிப்பிட்டுள்ளது. உலகெங்கிலும் சுமார் 35.6 மில்லியன் மக்கள் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டின் “உலக மருந்து அறிக்கை“ கூறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் இளைஞர்கள் மற்றும் பதின் பருவத்தினர் அதிக பங்கைக் கொண்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் சி மற்றும் பிற தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் எட்டு பேரில் ஒருவர் மட்டுமே அதைப் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் மூலமாக போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தினை வலுப்படுத்த வேண்டும் என டிசம்பர் 7, 1987 அன்று முதல் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26 ஐ கடைபிடிக்க  ஐ.நா முடிவு செய்தது.

போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் அதனாலேயே உயிரிழக்கின்றனர். இதன் காரணமாக அதை பயன்படுத்துபவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்புகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சமூக களங்கம் போன்ற காரணிகள் அதிலிருந்து அவர்களை மீட்பதை கடினமாக்கியுள்ளது. போதை பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்தாண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தொடர்புடைய கோளாறுகள் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.