This Article is From Oct 04, 2018

டி.வியை விட, ஆன்லைன் வீடியோவில் அதிக நேரத்தை செலவிடும் இந்தியர்கள்! -சர்வே ரிசல்ட்!

ஆன்லைன் வீடியோக்களை பார்வையிடுபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும்

டி.வியை விட, ஆன்லைன் வீடியோவில் அதிக நேரத்தை செலவிடும் இந்தியர்கள்! -சர்வே ரிசல்ட்!

இந்திய பார்வையாளர்கள் டிவியைக் காட்டிலும் ஆன்லைன் விடியோவை அதிகளவில் பார்த்து வருகிறார்கள்

New Delhi:

ஒரு வாரத்தில் டிவி பார்க்கப்படும் நேரத்தோடு, ஆன்லைன் வீடியோக்கள் பார்வையிடப்படும் நேரத்தை ஒப்பிட்டால் 8 மணி நேரம் 28 நிமிடங்கள் வித்தியாசப்படுவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் சேனல்கள் மூலம் தொடர்ச்சியாக படங்கள், செய்திகள், ரியாலிட்டி ஷோக்களை இந்தியர்கள் அதிகளவில் பார்த்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இதானல், ஆன்லைன் வீடியோவை அதிகம் பார்வையிடுபவர்களை உலகம் முழுவதிலும் கணக்கெடுத்ததில் இந்தியர்களே முன்னனி வகிக்கிறார்கள். இது கடந்த 2016-ம் ஆண்டோடு ஒப்படும் போது 58 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வின் பெயர் ’ஸ்டேட் ஆப் ஆன்லைன் வீடியோ 2018’ என்பதாகும்.

ஆன்லைன் மீடியம் எண்ணற்ற நிகழ்ச்சிகளை கொடுப்பதால் மக்கள் டிவியிலிருந்து ஆன்லைன் மீடியாவிற்கு மாறிவிட்டதாக, லைம் லைட் நெட்வொர்க்ஸின் இயக்குனர் ஜாஹீர் அப்பாஸ் கூறியுள்ளார்.

மேலும், புதுப்புது சலுகைகளுடன் குறைவான விலையில் இன்டெர்நெட் பிளான்கள் வருவதால், ஆன்லைன் வீடியோக்களை பார்வையிடுபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

.