This Article is From Aug 31, 2018

ஆசிய போட்டிகள்: இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் இறுதி போட்டியில், ஹாங்காங் அல்லது ஜப்பான் அணியுடன் இந்தியா மோத உள்ளது

ஆசிய போட்டிகள்: இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 13வது நாளான இன்று, பெண்களுக்கான ஸ்குவாஷ் அரை இறுதி போட்டி நடைப்பெற்றது.

இந்த போட்டியில், இந்தியா - மலேசியா ஆகிய அணிகள் மோதின. இந்தியாவைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் கொண்ட குழு 2-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது

இதன் மூலம், மகளிருக்கான குழு ஸ்குவாஷ் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதனால், தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் இறுதி போட்டியில், ஹாங்காங் அல்லது ஜப்பான் அணியுடன் இந்தியா மோத உள்ளது.

.