This Article is From Dec 07, 2018

முதல் டெஸ்ட் புஜாரா சதம் : சரிவிலிருந்து மீண்டது இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் துவங்கயது

முதல் டெஸ்ட் புஜாரா சதம் : சரிவிலிருந்து மீண்டது இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் துவங்கியது. 1947 முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா ஒருமுறை கூட அங்கு தொடரை வென்றதில்லை. இந்த முறை பலம் குறைந்த ஆஸ்திரேலிய அணியை வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்கியுள்ளது. டாஸில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்தியா அறிவித்திருந்தபடி 12 பேர் கொண்ட அணியிலிருந்து விஹாரி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் விஜய் களமிறங்கினர்.

இரண்டாவது ஓவரிலேயே ராகுல் 2 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முரளி விஜய் 11 ரன்களுக்கும், இந்திய கேப்டன் விராட் கோலி 3 ரன்களுக்கும், துணைக் கேப்டன் ரஹானே 13 ரன்களுக்கும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 15 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பேட்டிங்கில் தடுமாறும் இந்திய அணியை இந்த டெஸ்ட் துவங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய பத்திரிகை பயப்படும் கிரிக்கெட் மட்டைகள் என்று விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவு இடைவேளையின் போது 56/4 என்ற கணக்கில் இருந்த இந்திய அணி. தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது. 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா 37 ரன்களும், ரிஷப் பண்ட் 25 ரன்களும் எடுத்து மோசனான ஷாட் ஆட முயற்சித்து ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளையின் போது புஜாரா நிதானமாக ஆடி 46 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

புஜாராவுடன் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியா ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் துவங்கியது. 1947 முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா ஒருமுறை கூட அங்கு தொடரை வென்றதில்லை. இந்த முறை பலம் குறைந்த ஆஸ்திரேலிய அணியை வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்கியுள்ளது. டாஸில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்தியா அறிவித்திருந்தபடி 12 பேர் கொண்ட அணியிலிருந்து விஹாரி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் விஜய் களமிறங்கினர்.

இரண்டாவது ஓவரிலேயே ராகுல் 2 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முரளி விஜய் 11 ரன்களுக்கும், இந்திய கேப்டன் விராட் கோலி 3 ரன்களுக்கும், துணைக் கேப்டன் ரஹானே 13 ரன்களுக்கும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா 37 ரன்களும், ரிஷப் பண்ட் 25 ரன்களும் எடுத்து மோசனான ஷாட் ஆட முயற்சித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அஷ்வின் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

பொறுப்பை உணர்ந்து ஆடிய புஜாரா நிதானமாக ஆடி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை பூர்த்தி செய்தார். புஜாரா 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் குவித்துள்ளது. 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்தியா சரிவிலிருந்து மீண்டுள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார், கம்மின்ஸ், ஹேசல்வுட், லயன் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.

.