This Article is From Oct 31, 2018

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல் - 23 இடங்கள் முன்னேறிய இந்தியா

உலக வங்கி வெளியிட்டுள்ள தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 77-வது இடத்தை பிடித்துள்ளது

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல் -  23 இடங்கள் முன்னேறிய இந்தியா

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது இந்தியா 142-வது இடத்தில் இருந்தது.

New Delhi:

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்துள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2-வது முறையாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது, உலக வங்க வெளியிட்ட தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. இதன்பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம் தொடங்குவதை எளிமைப்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கையால் கடந்த ஆண்டு இந்தியா 100-வது இடத்திற்கு முன்னேறியது.

இந்த நிலையில்தான் உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்திருக்கிறது. இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், இந்தியாவில் வர்த்தகம் செய்வதை மிகவும் எளிமைப் படுத்தி இருக்கிறோம். ஒருவேளை வரலாற்றிலேயே இப்படி செய்திருப்பது முதன்முறையாக கூட இருக்கலாம் என்றார்.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜகவுக்கு எதிராக கிளப்பி வருகின்றன.

இந்த நிலையில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

.