This Article is From Jun 16, 2019

அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரி: இன்று முதல் அமலுக்கு வருகிறது

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட் பருப்பு வகைகள், இரும்பு, உருக்கு பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்கவுள்ளது.

இந்த வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது (Representational)

ஹைலைட்ஸ்

  • 29 அமெரிக்க பொருட்கள் மீது வரி அதிகரிக்கிறது.
  • இந்த வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • இதன் மூலம் 217 கோடி டாலர் வரி வருமானத்தை இந்தியா பெறும்
New Delhi:

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை இந்தியா நாளை முதல் அமல்படுத்த உள்ளது. பாதாம், வால்நட், பருப்பு வகைகள் உள்ளிட்ட 29 பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சக வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை அதிகரிக்கும் முடிவை இந்தியா பலமுறை ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை முறையே 25 சதவீதமாகவும் 10 சதவீதமாகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அதிகரித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட் பருப்பு வகைகள், இரும்பு, உருக்கு பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. இது ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி அமலுக்கு வர இருப்ப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் எனவும், விவசாயப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது.ஆனால், தனது முடிவில் அமெரிக உறுதியாக இருந்தது. மேலும் வரிவிதிப்பு விஷயத்தில் இந்தியாவை அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.


இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன்படி வால்நட் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 120 சதவீதமாகவும், கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக் கடலை மசூர் உள்ளிட்ட பருப்பு வகைகள் மீதான வரி 20 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாகவும் போரிக் அமிலம், சில வகை பிளாஸ்டிக் பொருள்கள் மீதான வரி 7.5 சதவீதமாகவும் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் சோதனைப் பொருள்கள் மீதான வரி 10 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

.