This Article is From Aug 22, 2020

30 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்தது இந்தியா!

மகாராஷ்டிரா அதிகபட்சமாக 6,57,450 கொரோனா நோயாளிகளைக் கொண்டு முதல் இடத்திலும், 3,73,410 நோயாளிகளைக்கொண்டு தமிழகம் இரண்டாவது இடத்திலும், 3,45,216 எண்ணிக்கையுடன் ஆந்திர பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

30 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்தது இந்தியா!

மீட்பு விகிதம் மேம்பட்டிருந்தாலும், இந்தியாவில் கோவிட் -19 எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன

ஹைலைட்ஸ்

  • இந்நிலையில் 15 நாட்களுக்குப்பின்னர் தற்போது 10 எண்ணிக்கைகள் அதிகரிப்பு
  • 29,580லிருந்து 30,05,281 ஆக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது
  • கடந்த 24 மணி நேரத்தில் 69,878 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்தினை கடந்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 7 அன்று 20 லட்சம் கொரோனா எண்ணிக்கையை இந்தியா பதிவு செய்திருந்தது. இந்நிலையில் 15 நாட்களுக்குப்பின்னர் தற்போது 10 எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 29,580லிருந்து 30,05,281 ஆக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 18 நாட்களாக அதிகபட்ச புதிய கொரோனா எண்ணிக்கையை பதிவு செய்து வந்த இந்தியா தற்போது உலக அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா அதிகபட்சமாக 6,57,450 கொரோனா நோயாளிகளைக் கொண்டு முதல் இடத்திலும், 3,73,410 நோயாளிகளைக்கொண்டு தமிழகம் இரண்டாவது இடத்திலும், 3,45,216 எண்ணிக்கையுடன் ஆந்திர பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 69,878 நபர்கள் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

.