2-ம் கட்ட மக்களவை தேர்தல்: 66% வாக்குப்பதிவு- 10 ஃபேக்ட்ஸ்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்று தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

 Share
EMAIL
PRINT
COMMENTS

18 இடங்களுக்கான சட்டசபை இடைத் தேர்தலின் முடிவைப் பொறுத்துதான் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு இருக்குமா கவிழுமா என்பது முடிவாகும். 


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. 95 Lok Sabha seats in 11 states and Puducherry are voting in second phase
  2. Four Union Ministers, ex-PM HD Deve Gowda, Hema Malini among contestants
  3. Polling in 38 of the 39 Lok Sabha seats in Tamil Nadu

2019 லோக்சபா தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கில் எந்த பாதிப்பும் ஏற்படாததால், வாக்குப்பதிவு சுமூகமாக நடந்தது. 38 லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்திய அளவில் மொத்தமாக 11 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் 95 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. தேர்தலுக்கான முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

10 ஃபேக்ட்ஸ்:

1.மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. ராய்குஞ்ச் தொகுதியில் வாக்களிக்க வந்த சிபிஎம் வேட்பாளர் முகமது சலீமின் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர்.

2.திரிபுராவின் கோவால் மாவட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் பிரக்யா தேவ் பர்மன் கான்வாய் மீது கற்கள் எறியப்பட்டது. இந்த சம்பத்தை அடுத்து மாநிலத்தின் ஆளும் ஐபிஎப்டி கட்சித் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

3.அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வாக்கு இயந்திரம் பல இடங்களில் பழுதாகிவிட்டதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. தமிழகத்தில் மட்டும் சுமார் 384 மின்னணு வாகுப்பதிவு இயந்திரம் மற்றும் 692 வாக்குச் சீட்டு இயந்திரங்களும் பழுதானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

4.ஸ்ரீநகரில் உள்ள பாத்மலூ, கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள பந்தன்ச் பகுதி மற்றும் புட்காம் மாவட்டத்தில் வாக்குப்பதிவை குலைக்கும் நோக்கில், வாக்குச்சாவடி நோக்கி சிலர் கற்கள் எறிந்தனர். இதனால் அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் மோதல் ஏற்பட்டது. இதில் பொது மக்களில் ஒருவரும் 4 காவலர்களும் காயமடைந்தனர். 

5.இன்று தமிழகத்தில் 38 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவல் 10 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகள், அசாம், பிகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மூ காஷ்மீரில் 2 தொகுதிகள், புதுச்சேரி மற்றும் மணிப்பூரில் தலா 1 தொகுதியில் தேர்தல் நடந்தது. 

6.இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பிரசாரத்தின் போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேனகா காந்தி, மாயாவதி மற்றும் அசாம் கான் ஆகியோருக்கு பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டது. 

7.18 இடங்களுக்கான சட்டசபை இடைத் தேர்தலின் முடிவைப் பொறுத்துதான் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு இருக்குமா கவிழுமா என்பது முடிவாகும். 

8.இன்றைய தேர்தலில் மத்திய அமைச்சர்கள் ஜித்தேந்திர சிங், ஜுவல் ஓரம், சதாநந்தா கவுடா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், அ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோரும் இன்று போட்டியிட்டனர்.

9.லோக்சபா தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் ஒடிசாவில் நடைபெறுகிறது. 4 கட்டங்களாக இந்தத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. 

10.தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்று தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................