தனது கருத்து குறித்து பூஷன் பின்னவாங்கவும் மன்னிப்புகோரவும் பூஷன் மறுத்துவிட்டார்.
New Delhi: மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தையும், அதன் தலைமை நீதிபதியையும் விமர்சித்ததாக நீதிமன்றம் அவரை அமவதிப்பு குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் தண்டனை குறித்த விவரங்கள் இன்று வெளிவர இருக்கின்றன.
முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார். நீதிமன்றம் அவர் தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், மன்னிப்புகோரவும் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக கடைசி விசாரணையில், பூஷனின் வழக்கறிஞர்,“நீதிமன்றம் விமர்சனங்களை முழுமையாக அடைத்துவிட முடியாது.” என வாதிட்டிருந்தார். அதே போல அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் தண்டனைக்கு எதிராக வாதிட்டார்.
வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், “பூஷன் நீங்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதி. எனவே நீங்கள் இதற்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்பட முடியாது. மேலும், இந்த அமைப்பு ஒவ்வொருவரையும் மதிக்கின்றது. நாங்கள் இதேபோல யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால் இந்த அமைப்பின் மீது யாருக்கும் நம்பிக்கை இருக்காது.” என நீபதி அருன்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.