This Article is From Jul 14, 2018

கட்சிக் கொடியை முதன்முறையாக ஏற்றப் போகும் உதயநிதி… திமுக-வில் பரபர!

பல தமிழ் திரைப்படங்களை தயாரித்தும் நடித்தும் வரும் உதயநிதி ஸ்டாலின், தொடர்ச்சியாக திமுக-வின் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்

கட்சிக் கொடியை முதன்முறையாக ஏற்றப் போகும் உதயநிதி… திமுக-வில் பரபர!

ஹைலைட்ஸ்

  • நான எப்போதும் திமுக-காரன் தான், உதயநிதி
  • முரசொலி-யின் எம்.டி-யாக உதயநிதி இருந்து வருகிறார்
  • காஞ்சிபுரத்தில் வரும் 15-ம் தேதி உதயநிதி கொடி ஏற்றி வைக்கிறார்
Chennai:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றி பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்க உள்ளார்.

பல தமிழ் திரைப்படங்களை தயாரித்தும் நடித்தும் வரும் உதயநிதி ஸ்டாலின், தொடர்ச்சியாக திமுக-வின் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். குறிப்பாக ‘முரசொலி’ நாளிதழுக்கு அவர் தான் எம்.டி-யாகவும் இருந்து வருகிறார்.

‘நான் எப்போதும் திமுக-காரன் தான்’ என்று மார்தட்டிக் கொள்ளும் உதயநிதி, தீவிர அரசியலில் இறங்கப் போதற்கான முன்னெடுப்பே இந்த கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு என்று கூறப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் வரும் 15 ஆம் தேதி, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, உதயநிதி 7 இடங்களில் திமுக கட்சிக் கொடி ஏற்ற உள்ளார். இது குறித்து முரசொலி நாளிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக் கொடி ஏற்றிய பின்னர் திமுக தொண்டர்கள் மத்தியில் உதயநிதி சிறப்புரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர் இப்படி, கொடி ஏற்றலாமா? என்ற கேள்வி திமுக-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ‘கட்சிப் பதவியில் இல்லாத பலரும் கொடி ஏற்றியுள்ள நிகழ்ச்சிகள் பல நடந்துள்ளன. கட்சி உறுப்பினராகவோ அல்லது கட்சியின் கொள்கைகளில் உடன்பாடு இருந்தோலோ கொடி ஏற்ற முடியும். அது மட்டுமல்லாமல் உதயநிதி தொடர்ச்சியாக திமுக-வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். எனவே, அவர் கொடி ஏற்றுவதில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது’ என்று திமுக தலைமைக்கு நெருக்கமான ஒருவர் நம்மிடம் கூறினார்.

.