This Article is From Jun 26, 2018

ஐஐடி ரூர்க்கி அறிமுகப்படுத்தும் 'காற்றுப்பை பாதுகாப்பு தலைகவசம்'

சாதரண ஹெல்மெட்டுகள் போதுமான அளவு பாதுகாப்பினை அளிக்க தவறுகின்றது. உச்சக்கட்ட வேகத்தின் போது ஏற்படும் விபத்துகளில், சாதரண ஹெல்மெட்கள் பயன்படுவதில்லை

ஐஐடி ரூர்க்கி அறிமுகப்படுத்தும் 'காற்றுப்பை பாதுகாப்பு தலைகவசம்'

The concept of 'Inflatable Helmet' is inspired from the inflatable space structures

Roorkee: ரூர்க்கி: ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துகளில் 1.2 மில்லியன் மக்கள் உயிர் இழக்கிறார்கள், பல மில்லியன் மக்கள் காயம் அடைகிறார்கள். இந்தியாவில் 27% சாலை விபத்துகளுக்கு காரணம் இருசக்கர மோட்டார் வாகனங்களே. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் போதுமான பாதுகாப்பு அளிக்காததை கருத்தில் கொண்டு, ஐஐடி ரூர்க்கி மாணவர்கள் காற்றுப்பை பாதுகாப்பு தலைகவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

“சாதரண ஹெல்மெட்டுகள் போதுமான அளவு பாதுகாப்பினை அளிக்க தவறுகின்றது. உச்சக்கட்ட வேகத்தின் போது ஏற்படும் விபத்துகளில், சாதரண ஹெல்மெட்கள் பயன்படுவதில்லை ” என்று ஐஐடி ரூர்க்கி தெரிவித்தது.

காற்று ஊதப்பட்ட ஹெல்மெட்களில், சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. வேகத்தையும், மோதல் ஏற்படக்கூடிய சூழலையும் கணித்து கண்டறியும் வசதிகள் இதில் உள்ளது. மோதும் நிலையில் வாகனம் இருப்பதை கண்டறிந்தால், தலையை சுற்றி சிறப்பு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் இந்த ஹெல்மெட்.

ஐஐடி ரூர்க்கி மெக்கானிக்கல் துறையை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் மூன்று பேர் இந்த தலைகவசத்தை கண்டுபிடித்துள்ளனர். சாரங் நக்வான்ஷி, மோஹித் சித்தா, ராஜவர்தன் சிங் ஆகிய மெக்கானிக்கல் துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்களுக்கு இந்த ப்ராஜக்டில் பேராசிரியர் சஞ்சய் உபதேய் வழிகாட்டி உதவியுள்ளார்.

ஹெல்மெட்டின் தொழில்நுட்பம் பற்றி பேசும்பொழுது, “இந்த தலைக்கவசத்தை தயாரிப்பின் செயல்திறன் மற்றும் செயலாக்க சோதனையில், நல்ல பாசிட்டிவ்வான ரிசல்ட் கிடைத்துள்ளது. எனினும், அதிக அளவிலான உற்பத்திக்கு இன்னும் அதிக சிரத்தையும் தொழில்துறையின் ஆதரவும் தேவைப்படுகிறது. இந்த சாதனத்தின் தயாரிப்பு செலவை குறைப்பதற்கும், வாடிக்கையாளர் பயன்பாட்டை இன்னும் எளிமைப்படுத்துவதற்கும் பெரிய தொழில் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட முயற்சி செய்து வருகிறோம்" என கூறினார் பேராசிரியர் சஞ்சய் உபதேய்.

கருவியின் கண்டுபிடிப்பை குறித்து பேசுகையில், “இஸ்ரோவில் இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொண்ட பொழுது, எங்களுக்கு இந்த தலைக்கவசத்தை உருவாக்குவது குறித்த ஐடியா கிடைத்தது. இந்தியாவில் முதல் முறையாக இது போன்ற தொழில்நுட்பம் கொண்ட ஹெல்மெட்டை தயாரிப்பதால், போதுமான உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை. இது வரை இந்த தயாரிப்பு குறித்த எங்களது ஆராய்ச்சிக்கு கிடைத்துள்ள ரிசல்ட் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. எங்களது ஐடியாவை நிஜமாக்குவதற்கான பணிகளில் உழைத்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார் மாணவர் சாரங் நாக்வான்ஷி.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட காற்றுப்பை ஹெல்மெட்டுகள், வாகனம் மோத உள்ளது என்பதை அறிந்ததும் தலைக்கு ஏற்படும் சேதத்தினை நான்கு மடங்கு குறைக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தலைக்கு ஏற்படும் காயங்களை இந்த ஹெல்மெட் குறைத்துள்ளது என்று சோதனை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
 
.