This Article is From Mar 30, 2020

‘கொரோனா ஹெல்மட்’ - விழிப்புணர்வுக்கு சென்னை போலீஸின் புது யுக்தி!!

Corona Helmet: இது குறித்த வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.

‘கொரோனா ஹெல்மட்’ - விழிப்புணர்வுக்கு சென்னை போலீஸின் புது யுக்தி!!

Corona Helmet: மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மற்றும் அரசு துறைகள் பல்வேறு வகைகளில் வித்தியாசமான முயற்சிகளைக் கையாண்டு வருகின்றன. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • இன்று மட்டும் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
  • இந்தியளவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது

Corona Helmet: இந்தியாவில் 1000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்று மட்டும் ஈரோட்டில் 8 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது சோதனை முடிவில் தெரிந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடந்த செவ்வாய் கிழமை ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதிற்கும் அமல்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. 

ஆனால், இந்த ஊரடங்கின்போதும் பலர் வெளியில் சுற்றி வருவதால் பல கறார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு மற்றும் போலீஸ். சென்னையில் போலீஸார், ‘கொரோனா' வைரஸ் தோற்றம் கொண்ட ஹெல்மட்டை அணிந்து, பைக்கில் வரும் நபர்களை எச்சரித்து, வீட்டிலேயே இருக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். 

இது குறித்த வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன. மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மற்றும் அரசு துறைகள் பல்வேறு வகைகளில் வித்தியாசமான முயற்சிகளைக் கையாண்டு வருகின்றன. 

.