உ.பியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணிபுரியும் அரசு ஊழியர்கள்…! காரணம் இதுதான்

கட்டிடம் மட்டும் பாழடைந்து கிடக்கவில்லை. போதிய அலமாரிகள் இல்லாமல் முக்கியமான ஆவணங்கள் மற்றும் ஃபைல்கள் அட்டை பெட்டிகளில் கிடப்பதையும் காண முடிகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உ.பியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணிபுரியும் அரசு ஊழியர்கள்…! காரணம் இதுதான்

அலுவலகக் கட்டிடம் “பாழடைந்து விட்டதால்” வேலை செய்யும்போது ஹெல்மெட் அணிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Banda: 

உத்தர பிரதேச அரசு ஊழியர்களின் அலுவலகத்திற்குள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியுரியும் புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளத்தில் வெளியானது. 

உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் மின்சாரத் துறையில் பல ஊழியர்கள் தங்கள் அலுவலகக் கட்டிடம் “பாழடைந்து விட்டதால்” வேலை செய்யும்போது ஹெல்மெட் அணிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் பணிபுரியும் அறையின் கூரை பழுதடைந்து விட்டதாகவும் அறையின் நடுவில் உள்ள தூண் மட்டுமே கூரையை தாங்கி வருகிறது. 

“ஏதேனும் விபத்து நடந்தால் எங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே நாங்கள் வேலையில் ஹெல்மெட் அணிந்து கொள்கிறோம். அலுவலக கட்டிடத்தின் நிலை குறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பழுது பார்க்கும் பணி தொடங்குவதற்கு முன் சிலர் கொல்லப்படலாம்” என்று ஊழியர்களில் ஒருவர் தெரிவித்தார்.  மழைக்காலத்தில் கூரை ஒழுகும் போது குடைகளை கொண்டு வருவார்கள் என்று கூறினார். 

கட்டிடம் மட்டும் பாழடைந்து கிடக்கவில்லை. போதிய அலமாரிகள் இல்லாமல் முக்கியமான ஆவணங்கள் மற்றும் ஃபைல்கள் அட்டை பெட்டிகளில் கிடப்பதையும் காண முடிகிறது. அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்க தயாராக இல்லை. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................