This Article is From Jan 23, 2020

71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது?!!

குடியரசு தினம் : இந்தியா தனது சுதந்திர தினத்தை கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம்தேதியில் இருந்தும் குடியரசு தினத்தை 1950 ஜனவரி 26-ம்தேதியில் இருந்தும் கொண்டாடி வருகிறது.

71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது?!!

குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கலந்து கொள்கிறார்.

New Delhi:

குடியரசு தின விழாவான ஜனவரி 26-ம்தேதி நம்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று 3 ஆண்டுகளில் 1950-வது ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த பின்னரும், நம்மில் சிலருக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. குழப்பத்திற்கு அவர்கள் ஆளாகிறார்கள். கடந்த ஆண்டு டெல்லி போலீசார் ஆகஸ்ட் 15-யை குடியரசு தினமாக பதிவிட்டிருந்தனர். இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. 

இரண்டும் தேசிய விழாக்கள்தான். அவற்றில் ஒன்று மற்றொன்றிலிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதை பார்க்கலாம்.

நாள் 

இந்தியா தனது முதல் சுதந்திர தினத்தை கொண்டாடிய நாள்  - 1947 ஆகஸ்ட் 15
இந்தியா தனது முதல் குடியரசு தினத்தை கொண்டாடிய நாள் - 1950 ஜனவரி 26

காரணம்

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தது. தேசிய தலைவர்கள் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இதன் நினைவாக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர இந்திய குடியரசில் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. 

கொண்டாட்ட முறை

சுதந்திர தின விழா நாட்டிற்காக உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், புரட்சியாளர்கள் உள்ளிட்டோரது நினைவாக கொண்டப்படுகிறது. இந்த நாளில் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி, கோட்டை கொத்தளத்தில் உரையாற்றுவார்.  மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில இடங்களில் அணிவகுப்பு நடைபெறும். இந்நாளையொட்டி நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றப்படும். பல இடங்களில் தேசிய கொடி வண்ணத்தில் அமைந்த பட்டங்கள் பறக்க விடப்படும். நாட்டுப்பற்று பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு இனிப்புகள் வழங்கப்படும். சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுடன் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார். 

குடியரசு தினமான ஜனவரி 26-ம்தேதியன்று டெல்லியில் குடியரசு தலைவர் தனது பாதுகாவலர்கள் 200 பேருடன் விழா மேடைக்கு வருவார். பாதுகாவலர்கள் சிவப்பு சட்டை, தங்க வண்ணம் கொண்ட தலைப்பாகைகளை அணிந்திருப்பார்கள். குடியரசு தலைவர் வந்ததும், தேசிய கீதத்தை ஒலிக்க உத்தரவிடுவார். இந்த நிகழ்ச்சியில் உலக தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்தியாவின் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெறும். 

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய 2 நாட்களுமே தேசிய விடுமுறை நாட்களாகும். 

.