This Article is From May 10, 2019

கூகுள் டூடுல்: கர்ப்ப கால அனீமியாவை தடுத்த லூசி வில்ஸ்க்கு சிறப்பு செய்த கூகுள்

Google Doodle: மருத்துவத்தில் முன்னோடி ஆராய்ச்சியாளர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனீமியா நோயைக் கண்டறிந்து அதற்கு போலிக் ஆசிட் மாத்திரையைக் கண்டறிந்தவர். 

கூகுள் டூடுல்:  கர்ப்ப கால அனீமியாவை தடுத்த லூசி வில்ஸ்க்கு சிறப்பு செய்த கூகுள்

Google Doodle: லுசி வில்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு செய்த கூகுள் டூடுல்

New Delhi:

குருதியியல் (haematologist )என அறியப்படுகிற துறையில் தன் சாதனைகளை செய்தவர் லூசி வில்ஸ். லூசி வில்ஸின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வைத்து கொண்டாடுகின்றது. லூசி வில்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் பெண்  மாணவர்களை பயிற்றுவிக்க லண்டன் செல்ட்சென்ஹாம் கல்லூரியில் பயின்றார்.

1911 ஆம் ஆண்டில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூஹோம் கல்லூரியில் தாவரவியல் மற்றும் புவியியல்  ஆகியவற்றில் முதன்மையான மதிப்பெண்களைப் பெற்றார். லண்டன் பெண்களுக்கான மருத்துவ பள்ளியில் பெண்களுக்கு பயிற்றுவிக்க நியமிக்ப்பட்ட முதல்  பெண் மருத்துவர். 

மருத்துவத்தில் முன்னோடி ஆராய்ச்சியாளர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனீமியா நோயைக் கண்டறிந்து அதற்கு போலிக் ஆசிட் மாத்திரையைக் கண்டறிந்தவர். 

கர்ப்ப காலத்தில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதனை ஆய்வு செய்த லூசி 1920 முதல் 1930 வரை இந்தியாவில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். மும்பையில் ஜவுளித்துறையில் உள்ள பெண்கள் கடுமையான அனீமியா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தார். அதற்கு தீர்வாக மாத்திரையினைக் கண்டறிந்தவர்.  கர்ப்பமான பெண்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்படுவது ஃபோலிக் ஆசிட் மாத்திரைதான்.  இரும்புச்சத்து மற்றும் பி12 ஊட்டச்சத்துகள் உள்ளது. கர்ப்பகால அனீமியாவை தடுக்கிறது. 

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பயணத்திலும் மருத்துவ ஆய்விலும் செலவிட்டவர். கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடினை நீக்கவும் ஆராய்ச்சியினை மேற்கொண்டார்.  ஏப்ரல் 16, 1964 அன்று இயற்கை எய்தினார்.

.